March 14, 2017

DBY Centre

“Where two or three are gathered in my name there I am” Mt 18:19 Is the tag line for this dimension of the youth ministry in a non-formal setting.  This is a movement for the young, regardless of their greed, to grow to be responsible and honest citizens in the society.

 

News and Photos of DBY Centre

நல்ல உள்ளம் கொண்ட துடிப்புள்ள இளைஞர்கள் வாழும் இடமாகிய பவுஞ்சூர் தொன் போஸ்கோஇளையோர் மன்றத்தின் சார்பாக வாசகர்களாகிய உங்களுக்கு எங்களது பணிவான வணக்கம். செங்கல்;பட்டுமறைமாவட்டம் பவுஞ்சூர் திருக்குடும்பஆலயப்பங்கினையும் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியையும் 30 ஆண்டுகளுக்கு வழிநடத்திய சென்னை தொன்போஸ்கோ மாநிலத்திடம் ஒப்படைத்துள்ளது. சலேசியர்கள் இங்கு வந்தநாளிலிருந்து பங்குபணி பள்ளிபணி மற்றும் இளையோர் பணியையும் செய்துக்கொண்டுவருவது இளைஞர்களாகிய எங்களுக்கு மிக்கமகிழ்ச்சி. தற்ப்போதைய இல்லத்தந்தை அருட்தந்தை. ராஜ் மைக்கல் மற்றும் பங்குத்தந்தை அருட்தந்தை. மைக்கல் தாமஸ் மற்றும் இளைஞர் மன்றபொருப்பாளர் அருட்தந்தை.வின்சென்ட்பிரபு ஆகியோர் இளையோர்களாகிய எங்கள் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவது எங்களுக்கு முழு மகிழ்ச்சியை தருகின்றது. வளர்ந்து வரும் எங்கள் இளைஞர் மன்றத்தின் தற்ப்போதைய இளைஞயோர் எண்ணிக்கை 150.

கடந்த நான்கு மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை தங்களோடு பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகின்றோம்.  நாங்கள் தினமும் துவக்கத்தின் போதும் முடிவின் போதும் மன்றசெபத்தை சொல்கின்றோம். ஒருஅருள் நிறைந்த மரியே என்ற செபமும் சொல்லப்படுகின்றது. முக்கியமாக இச்செபத்தை உபகாரிகளுக்காகவும் அனைத்து சலேசியர்களுக்காகவும் மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஒப்புக்கொடுத்து வருகின்றோம். மன்றசெபம் மனப்பாடமாக தெரியாதவர்கள் எவரும் இல்லை. சிறப்பு கால்பந்து பயிற்ச்சியானது 6 நாட்களுக்கு கொடுக்கப்பட்டது. 80 இளையோருக்கு  கால்பந்து பூட்ஸ் வாங்கிதரப்பட்டு பயிற்;ச்சியும் வழங்கப்பட்டது. சிறப்பு கால் பந்துப்பயிற்ச்சியாளும் தினப்பயிற்ச்சியினாலும் எங்களால் இப்போது நன்றாக விளையாடமுடிகிறது. ஊதவிய  அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உபகாரிகளுக்கும் எங்களது மனமார்;ந்த நன்றிகள். முக்கியமாக பிராட்வே தொன்போஸ்கோ இளையோர் மன்ற முக்கிய உறுப்பினர் அண்ணன் மரிய லூயிஸ் சார்லி அவர்களுக்கு எங்கள் நன்றிகள்;. அதே போல்; பேசன் பாலம் தொன்போஸ்கோ இளையோர் மன்ற உறுப்பினர்களின்; வருகையும் பயிற்ச்சியும் எங்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்குவகிக்கின்றது. புனித ப{ட்ஸ்; தொன் போஸ்கோ நிறுவனத்திற்கு சென்று அங்கு உள்ளமாணவர்களோடு விளையாட எங்களுக்கு வாய்ப்புகிடைத்தது. அந்த நிறுவனத்தின் இல்லத்தந்தை மற்றும் அங்குஉள்ள தந்தையர்களுக்கும் எங்களது நன்றிகள். பல சலேசியர்கள் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ உதவி வருகின்றார்கள.; அவர்களுக்கும் எங்கள் நன்றிகள். கைபந்து விளையாட்டில் எங்களுக்கு ஆர்வம் இருப்பதினால் கைபந்து விளையாட்டு பயிற்ச்சியும் எங்களுக்கு கொடுக்கப்பட்டது.

இங்கு உள்ள தந்தையர்களின் துனையோடும் எங்களின் முழு சுதந்திரத்தோடும் மன்ற தலைவர்கள் மற்றும் பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் சென்னை சலேசிய மாநிலத்தலைவர் அருட்தந்தை. கே. எம். ஜோஸ் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர். அவரின் வருகை எங்கள் மன்றத்திற்கும் எங்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளது. வாட்ஸ் அப் மூலமாகவும் நாங்கள் இளைஞர் மன்ற செய்திகளை பகிர்ந்துக்கொள்கின்றோம். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பொருப்பாக தங்கள் பணிகளை செய்து வருகின்றார்கள். ஓவ்வொரு நாளும் மன்ற முடிவின் போது ஒருவர் ஒருகருத்தினை பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. தந்தையர்களும் எங்களுக்காக வந்து கூட்டத்தில் கலந்துக்கொள்வதும் வழிநடத்துவதும் சிறப்பான ஒன்று.

எம் இளையோர் மன்ற உறுப்பினர்கள் நான்கில் ஒருபங்கு படித்துக்;கொண்டிருக்கின்றார்கள். சிலர் நமது மற்றும் அரசினர் நடத்தும் பள்ளிகளிலூம் சிலர் கல்லூரிகளிலும் படித்துவருகின்றனர். நான்கில் ஒருபங்கு இளையோர்கள் ஆசிரியர்களாகவும் மாத சம்பலம் மற்றும் தின கூலியாகவும் வேலை செய்துவருகின்றார்கள் மற்றும் சிலர் வேலைத்தேடிக்கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கார் தாரைதப்பட்டைவாசிக்கும் கலைகுழுவும் உள்ளது. இசைக்கருவிகள் வாசிக்கம் பயிற்ச்சியும் வழங்கப்படுகின்றது. சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் இளையோர்கள் வந்து சேர்ந்துக்கொண்டே இருக்கின்றார்கள். எந்த ஒருபிரிவினையும் பாராமல் புனித தொன்போஸ்கோ வழியில் எம் இளைஞர் மன்றம் நடந்துக்கொண்டுவருகின்றது. சென்னை சலேசியமாநிலத்தின் இளையோர் மன்றபொருப்பாளர் அருட்தந்தை மணிலாசர் வருகையிலிருந்து இன்னும் பல மாற்றங்களை எம் இளையோர் மன்றம் காண உள்ளது.

தற்போது நடக்கவிருக்கும் கோடை முகாமில் கால்பந்து, கைப்பந்து, கலைபயிற்சி, இசைப்பயிற்சி,  ஆங்கிலப்பயிற்சி, பொதுச்சேவை, தியானம், சுற்றுலா, இரத்ததானம், சலேசிய பயிற்சி மையங்களை அழைத்தல் மற்றும் பலவற்றை நடத்த எங்கள் தந்தையர்களோடு சேர்ந்து செய்ய இருக்கின்றோம். உங்கள் வருகையையும் உதவியையும் என்றும் எதிர்பார்க்கின்றோம். இவ்வாய்பினை வழங்கிய பொருப்பாளர்களுக்கு பவுஞ்சூர் தொன்போஸ்கோ இளையோர் மன்றத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.